தைப்பூச திருவிழாவையொட்டி தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்
தைப்பூச திருவிழாவையொட்டி தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்
கரூர்,
: தைப்பூச திருவிழாவை யொட்டி, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி
கோவிலில் தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
வேலாயுதம்பாளையம்
அடுத்த புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்
திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும்
சுவாமி திருவீதி உலா நடந்து வருகிறது. வரும், 11ல் தைப்பூசம் என்பதால்
அன்று மாலை, 4:35 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக,
மரத்திலான தேரை புதுப்பிக்கும் பணியில் நேற்று தொழி
லாளர்கள்
ஈடுபட்டனர். தேர் சுத்தப்படுத்தி, அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
தேர், மணிகளுக்கு வண்ணம் பூசும் பணியும் நடந்தது. மேலும் தேர் மேல்
பகுதியில் சவுக்கு கட்டை கொண்டு கட்டப்பட்டு வருகிறது.
வெண்ணைமலை,
பாலசுப்-பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திரு-விழாவை
முன்னிட்டு, வரும், 9ல், திருக்கல்யாண உற்சவம், 11 மாலை, 4:00 மணிக்கு
தேரோட்டம் நடக்கிறது. அதையொட்டி, தேரை அலங்கரிக்கும் பணி விறு-
விறுப்பாக
நடந்து வருகிறது. தொடர்ந்து, கொடி இறக்கம் மற்றும் விடையாத்தி
நிகழ்ச்சியுடன், தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.