சிறுமிக்கு பாலியல் சீண்டல் 'போக்சோ'வில் வாலிபர் கைது

ஸ்ரீமுஷ்ணம்: மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வாலீஸ்பேட்டையை சேர்ந்தவர் வனத்தையன் மகன் ஆரோக்கிய ரிஷப் ரொசாரியோ,24; ஐ.டி.ஐ., படித்து விட்டு வேலையில்லாமல் இருந்தார். இவர், 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

புகாரின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் ரேவதி, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆரோக்கிய ரிஷப் ரொசாரியோவை கைது செய்து, விசாரித்து வருகிறார்.

Advertisement