மீன்குஞ்சுகள் வளர்த்து விருதுநகரில் சாதனை

விருதுநகர்:எட்டு லட்சம் மீன் குஞ்சுகளை வளர்த்து, விருதுநகர் மாவட்டம் நிர்ணயிக்கப்பட்ட முழு இலக்கையும் அடைந்து, தமிழக அளவில் சாதனை படைத்துள்ளது. தமிழக அரசு உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்குவதற்காக, மீன் குஞ்சுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு 1000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, திருச்சுழி, வெம்பக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் 33 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன் இனங்களின், 8 லட்சம் மீன் குஞ்சுகள், 2024 செப்., 18 முதல் 2024 டிச., 18 வரை வளர்க்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் கந்தக பூமியாக இருந்த போதிலும், கடந்தாண்டு பெய்த மழையை சரியான முறையில் பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முழுமையாக நிறைவு செய்து, மாநில அளவில் சாதனை படைத்துள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement