லாரி உரிமையாளர் சங்க செயற்குழு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கடலுார் மாவட்ட கனரக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலர் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் இளஞ்சூரியன் முன்னிலை வகித்தனர்.

துணை செயலர் மணிமாறன் வரவேற்றார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும், அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மோட்டார் வாகன சட்டத்தின் படி, லாரிகளில் அதிக பாரம் ஏற்றக் கூடாது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement