மாணவியரிடம் அத்துமீறல் பள்ளியை சூறையாடிய பெற்றோர்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848777.jpg?width=1000&height=625)
திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, மணப்பாறைப்பட்டியில் குரு வித்யாலயா என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளி நிர்வாகியான சுதா என்பவரின் கணவர் வசந்தகுமார், 55, என்பவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார்.
சொந்த ஊருக்கு வந்துள்ள அவர், நேற்று பள்ளிக்கு சென்று, நான்காம் வகுப்பு அறைக்குச் சென்றார். அங்கு படிக்கும் மாணவியர் சிலரை அழைத்து சில்மிஷம் செய்தார்.
அந்த மாணவியர் எதிர்ப்பு தெரிவித்ததும், யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி சென்றார் என கூறப்படுகிறது.
பள்ளி முடிந்து தந்தையுடன் வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட மாணவியர் ஒருவர், பள்ளி நிர்வாகியின் கணவர் தவறாக தன்னிடம் நடந்தது குறித்து தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர், பெற்றோர் சிலருடன் சென்று பள்ளி நிர்வாகியிடம் விசாரித்தார். ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகியின் கணவரை சரமாரியாக தாக்கினர்.
படுகாயமடைந்த அந்த நபர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, பள்ளி நிர்வாகி கணவரின் சில்மிஷ வீடியோ பரவியது.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேற்று இரவு 9:00 மணிக்கு குரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு சென்று அங்கிருந்த கார் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
தொடர்ந்து, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும்
-
'கலாசாரம், ஒற்றுமையை பாதுகாப்பதில் துறவியரின் பங்கு இன்றியமையாதது: அமித் ஷா
-
--உலக கராத்தேயில் பதக்கம் வென்றவர்கள்
-
என்.ஆர்.,காங்., 15ம் ஆண்டு விழா அமைச்சர் லட்சுமி நாராயணன் வாழ்த்து
-
பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் குன்றத்தில் இன்று தெப்பத் திருவிழா
-
மாநில ஹாக்கி போட்டி
-
மத்திய பட்ஜெட்டை கண்டித்து டி.ஆர்.இ.யூ., ஆர்ப்பாட்டம்