மத்திய பட்ஜெட்டை கண்டித்து டி.ஆர்.இ.யூ., ஆர்ப்பாட்டம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848972.jpg?width=1000&height=625)
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியும் டி.ஆர்.இ.யூ., தொழிற்சங்கம் மதுரை கோட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்டத் தலைவர் ராஜூ தலைமை வகித்தார். மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் கார்த்திக் சங்கிலி முன்னிலை வகித்தார்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாமல் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்கள், கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, இளைஞர் நலன், சிறுகுறு தொழில்கள் ஆகியவற்றிற்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் லெனின், டி.ஆர்.இ.யூ., கோட்டச் செயலாளர் சிவக்குமார், இணைச் செயலாளர் சங்கரநாராயணன், அனைத்திந்திய ஸ்டேஷன் மாஸ்டர் சங்க சட்ட ஆலோசகர் விஜயராஜா, அனைத்திந்திய கார்டு கவுன்சில் கோட்டத் தலைவர் கார்த்திக், ஓடும் தொழிலாளர் சங்க கோட்டச் செயலாளர் ஜீவா, தெற்கு ரயில்வே பொறியாளர் சங்கத் தலைவர் செல்வநாராயணன் ஆகியோர் பேசினர்.
டி.ஆர்.இ.யூ., கோட்டப் பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.