என்.ஆர்.,காங்., 15ம் ஆண்டு விழா அமைச்சர்  லட்சுமி நாராயணன் வாழ்த்து 

புதுச்சேரி : அகில இந்திய என்.ஆர். காங்., 15வது ஆண்டு விழா வை முன்னிட்டு, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில், மாநில கட்சியாக ஆரம்பித்து மூன்றே மாதத்தில் ஆட்சியை பிடித்து, 15 ஆண்டு காலம் மாநிலக் கட்சியை வலிமையாக நடத்தி வருவது வரலாற்று சாதனையாகும். புதுச்சேரியின் தனித்தன்மையை காத்திட்ட 15 ஆண்டுகளாக தழைத்து ஆலமரமாய், தேசிய, மாநில கட்சிகளுக்கும் சவாலாய் என்.ஆர்.காங்., பேரியக்கம் உள்ளது.

முதல்வர் ரங்கசாமி கடந்த 2001 முதல் 2025 வரையிலான 25 ஆண்டுகளில் 16வது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற உடனே முதியவர் ஓய்வூதியத்தை ரூ.500 உயர்த்தியதுடன், 30,000 புதிய ஓய்வூதிய விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வழங்கினார்.

ரூ.1000 மாத மகளிர் உதவித் தொகை, பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்புத் தொகை என மகளிர் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை இந்தி யாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தி, நாட்டிற்கே முன்னோடியாக என்.ஆர்., உள்ளார்.

மக்கள் போற்றும் நல்லாட்சி தரும் இயக்கம் தான் அகில இந்திய என்.ஆர். காங்., பேரியக்கம். இந்த பேரியக்கம் இன்னும் வளர்ந்து வெள்ளி விழா, பொன்விழா நுாற்றாண்டு களம் காண வேண்டும் என மக்கள் விழைகின்றனர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement