மாணவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்: பொது சேவை மையத்தில் புதிய வசதி

ராசிபுரம்: மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்காக, மாணவர்களின் டிஜிட்டல் சான்றிதழ்களை சேமிக்க பொது சேவை மையத்தில், ஏ.பி.சி., ஐடி உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கையின்படி, மாணவர்கள் உயர்கல்வி படிப்பை முடிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாண-வர்கள் இடையில் நிற்பதை தவிர்க்கவும், அவ்வாறு இடையில் நின்றாலும் அவர்கள் படித்த அளவிற்கு சான்றிதழ் வழங்கவும் வசதி உள்ளது. உதாரணமாக பிளஸ், 2 முடித்த மாணவர் உயர்-கல்வி படிக்கும்போது, ஓராண்டு மட்டும் படித்து விட்டு பாதியில் நின்றால், குறிப்பிட்ட துறையில் அறிமுகம் பற்றி தெரிந்து கொண்டார் என்ற சான்றிதழ் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் முடித்தால் டிப்ளமோ சான்றிதழ், மூன்றாண்டு முடித்தால் டிகிரி, நான்கு ஆண்டுகள் முடித்தால் பொறியாளர் அல்லது மேற்படிப்-பிற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
இந்நிலையில், மாணவர்களின் தகுதிக்கான சான்றிதழ்களை, டிஜிட்டலில் பதிவேற்றம் செய்யும் வசதியை, மத்திய மனிதவ-ளத்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. மாணவர்களுக்கு அகாடமிக் பேங்க் கிரிடிட் என்ற ஏ.பி.சி., லாக்கரில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். ஒரு மாணவரின் சான்றிதழை, 7 ஆண்டுகள் சேமித்து வைக்கும் வசதி உள்ளது. இதற்காக ஏபிஏ-ஏஆர் என்ற ஆட்டோமேடேடு பர்மனன்ட் அகாடமிக் அக்-கவுண்ட் ரிஜிஸ்ட்ரி என்ற, 12 இலக்க எண்ணை தொடங்கலாம்.
மேலும், குறிப்பிட்ட அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் ஏ.பி.சி., ஐடிக்கு நேரடியாக சான்றிதழ் மற்றும் அவருடைய தனித்திறன் குறித்த விபரங்களை புள்ளிகள் கணக்கில் பதிவேற்றம் செய்யலாம். அதேபோல், மாணவர்கள் வேறு ஒரு கல்வி நிறுவனத்துக்கு செல்லும்போது, ஏ.பி.சி., ஐடி மூலம் சான்றிதழ்களை சரிபார்த்து குறிப்பிட்ட துறையில் சேர்ந்துக் கொள்ள முடியும்.
இந்த ஐடி.,யை, குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் மட்டும் உரு-வாக்க முடியும் என்ற நிலையை மாற்றி, தற்போது பொது சேவை மையங்களில் ஏ.பி.சி., ஐடியை உருவாக்கும் வசதியை ஏற்படுத்தி-யுள்ளனர். இதனால் கிராமப்புற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்-துள்ளனர்.

Advertisement