ஆயிரக்கணக்கான பறவைகள் அணைப்பாளையம் ஏரியில் அடைக்கலம்

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் ஏரியில், ஆயிரக்கணக்கான பறவைகள் அடைக்கலம் அடைந்துள்ளன.
ராசிபுரம் அடுத்த, அணைப்பாளையம் சாலை அருகே ஏரி அமைந்துள்ளது. கடந்த பருவமழை காலத்தில் பெய்த தொடர் மழையால் ஏரி நிரம்பியது. முக்கியமாக ராசிபுரம், காட்டூர் சாலை தடம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் அருகில் விவசாய நிலங்களில் இருந்த, 10க்கும் மேற்பட்ட கிணறுகளும் நிரம்பின. விடுமுறை-களில் சுற்று வட்டார இளைஞர்கள் குளிப்பது, மீன் பிடிப்பது என பொழுதுபோக்கு இடமாக ஏரி மாறிவிட்டது. கடந்த சில மாதங்களில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது.
அணைப்பாளையம் ஏரியில் சிறிய மீன்கள் லட்சக்கணக்கில் உள்-ளன. இதனால், மீன்களை பிடிக்க மனிதர்கள் மட்டுமின்றி, நாரை உள்ளிட்ட பறவைகளும் அதிகளவு சுற்றி திரிகின்-றன. பகலில் ஏரியில் உள்ள மரங்களில், ஆயிரக்
கணக்கான பறவைகள் உட்கார்ந்திருப்பதும் கூட்டமாக பறப்பதையும், சுற்று வட்டார பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Advertisement