போலீஸ் செய்தி

டாக்டருக்கு கொலை மிரட்டல்



தளவாய்புரம்: ஜமீன் கொல்லங் கொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலராக உள்ளவர் டாக்டர் அலெக்ஸாண்டர் 45, இவர் மீனாட்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளராக உள்ள சரவணனை ஒழுங்கீனமாக நடந்ததாக பணி மாறுதல் செய்தார். இதை மனதில் கொண்டு சரவணன் அடிக்கடி அலெக்சாண்டருக்கு அலைபேசியில் ஆபாசமாக பேசி குறுஞ்செய்தி அனுப்பியதுடன் மீண்டும் பழைய இடத்துக்கு பணி மாறுதல் செய்ய கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சேத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

3 மாத குழந்தை பலி



விருதுநகர்: அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் 3 மாத குழந்தையான ஹரிஹரசுதனுக்கு சளி பிரச்னை இருந்தது. இதனால் மூச்சு அடைப்பு ஏற்பட்டு பிப். 5 காலை 6:00 மணிக்கு பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பது தெரிந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

நகராட்சி தலைவர், ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது



ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி தலைவர் , ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்துஉள்ளனர். ராஜபாளையம் நகராட்சி தலைவர் பவித்ரா மேற்பார்வையில் நகராட்சி பணியாளர்கள் ஆறாவது வார்டு ஒய்யம்புலி தெரு, மாடசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாஸ் கிளீனிங்கில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஒய்யயம்புலி தெருவில் சிமெண்ட் ரோடு அமைக்க கேட்டு பேவர் பிளாக் பதிக்கும் பணி நடந்து பாதியில் நின்றுள்ளது குறித்து குடியிருப்புவாசிகள் கேட்டுள்ளனர்.

நகராட்சி தலைவர் விளக்கம் அளித்த போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் 55, பாஸ்கர் 50, இருவரும் தலைவர், நகராட்சி ஊழியர்களை தடுத்து அவதுாறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கமிஷனர் நாகராஜன் புகாரின் பேரில் இருவரையும் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement