அரசு பஸ்சில் சாம்பல் நிற அணில்களின் ஓவியங்கள்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848941.jpg?width=1000&height=625)
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் செண்பகத் தோப்பில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அரசு பஸ்களில் அதன் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இயற்கை, வனம், வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதில் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மதுரையில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் முழுக்க சாம்பல் நிற அணில் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
இதுவரை அரசு பஸ்களில் பல்வேறு வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்த மக்களுக்கு, தற்போது சாம்பல் நிற அணில்களின்ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை பார்த்து வியக்கின்றனர்.
இதன் மூலம் பஸ் பயணிக்கும் வழித்தட நகரங்களை சேர்ந்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய முயற்சியாக வரவேற்பு பெற்றுள்ளது.