ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்: ஊழியர் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் ஜமீன் கொல்லங்கொண்டான் வட்டார மருத்துவ அலுவலர் அலெக்ஸாண்டரை கண்டித்தும், அவர் மீதான பாலியல் புகாருக்கு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன்,மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஓய்வு பெற்றோர்அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வின் பேசினர்.

விசாரணை நடத்தி முடியும் வரை அவரை தற்காலிகமாக அவரது வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement