பயணிகள் வருகை குறைந்த கொடைக்கானல்
கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி முக்கிய சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடின. சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருவது வழக்கம்.
சில வாரமாக சீரற்ற வானிலை நிலவி பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெளி மாநிலம் ,உள் மாவட்ட பயணிகள் வருகையில்லாத நிலை நீடிக்கிறது.
இதையடுத்து இங்குள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஏரி சாலை,ஏரியில் படகு சவாரியின்றி வெறுமனே காணப்பட்டது. காற்றில் நிலவிய ஈரப்பதம், பனியின் தாக்கத்தால் குளிர் நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement