கஞ்சா விற்பனைராணுவ வீரர் கைது

வத்திராயிருப்பு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இலந்த குளத்தை சேர்ந்தவர் செந்தில் முருகன் 32, இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். நத்தம்பட்டி போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். எங்கிருந்து கஞ்சாவை கொண்டு வந்து விற்பனை செய்தார் என விசாரிக்கின்றனர்.

Advertisement