டூவீலர் விபத்து பலி 2 ஆனது

வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பிலாத்து மேற்குத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பையா 65. இவர் பேரன் சந்துருவுக்கு 12, ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அய்யலூரில் மாவு கட்டு போட்டு விட்டு பிப்., 3 டூவீலரில் ஊர் திரும்பினார். இவர்கள் ஹெல்மெட் அணியவில்லை.

தீத்தாகிழவனுார் அருகில் நான்குவழிச்சாலையை கடக்க முயன்ற போது ரெட்டியார்சத்திரம் எல்லைப்பட்டி முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அப்போது பின்னால் வந்த மற்றொரு கார் விபத்தில் சிக்கிய கார் மீதும் மோதியது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பையா நேற்றுமுன்தினம் இறந்த நிலையில் நேற்று சந்துரு இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement