சேதமான ரோடுகள்... ரேஷன் கடைக்கு ஆபத்து பயணம்.. பரிதவிப்பில் முத்துநகர் குடியிருப்போர்

திண்டுக்கல் : ரேஷன் கடைக்கு செல்லதிருச்சி பைபாஸ் ரோடை கடக்க வேண்டிய நிலை,சேதமானரோடுகள், வராத குடிநீர் என பல்வேறுபிரச்னைகளுடன்திண்டுக்கல் முத்துநகர் - வேதாத்திரி நகர் குடியிருப்போர்தத்தளிக்கின்றனர்.


திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்டமுத்துநகர் - வேதாத்திரி நகர் குடியிருப்போர் நலச்சங்கமுன்னாள் தலைவர்கள் துரைசிங், ஜெயராமன், பொருளாளர் சிவசங்கரன், இணைச்செயலர் ஜெயக்குமார்கூறியதாவது: எங்கள் பகுதி செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள் வருகிறது. தற்போது மாநகராட்சியடன் இணைக்கப்போவதாக தெரிவித்தனர். இதற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.இணைத்தால் பல பாதிப்புகள் ஏற்படும். மத்திய, மாநில அரசுகளின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள்,அதற்கான நிதிகள் இழக்கும் சூழல் ஏற்படும். வரிவிகிதங்கள் அதிகரிக்கும்.அறிவுத்திருக்கோயில் ரோடுமோசமாகிஆங்காங்குபெயர்ந்து கிடக்கிறது. வாகன ஓட்டிகள் முதல் பாதசாரிகள் வரை சிரமப்படுகிறோம்.

150க்கு மேற்பட்ட வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டப்படி குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டது. இதற்காக ரூ.3 ஆயுள் காப்புத்தொகை, குடிநீர் வரியாக ரூ.600 என செலுத்துகிறோம். ஆனால்ஒருநாள் கூட தண்ணீர் வரவில்லை. காவிரி குடிநீர் குழாயோடு இணைக்காததும், மேல்நிலைத்தொட்டி இல்லாததாலும் தண்ணீர் வருவதில்லை. குடியிருப்பு பகுதிகளில் 800 க்கு மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால்நாங்கள் பைபாஸ் ரோடை கடந்து ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலைஉள்ளது. நாள்தோறும் அச்சத்துடனேயே பயணிக்கும் சூழல் உள்ளது. இதனால்எங்கள் பகுதியிலியே ரேஷன் கடை அமைத்துத்தர கோரி பல முறை மனு அளித்தும்நடவடிக்கை இல்லை .தெரு நாய்களின் தொல்லை அதிகம் உள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை என்றனர்.

Advertisement