ரூ.1 கோடி மதிப்பு செம்மரங்கள் பறிமுதல்

1

ஹொஸ்கோட்: ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் இருந்து சித்துார், கோலார் வழியாக பெங்களூருக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில் திருப்பதி வனப்பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் தாலுகா கட்டிகேனஹள்ளி கிராமத்தில் நீலகிரி தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, திருப்பதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை திருப்பதி போலீசார், ஹொஸ்கோட்டின் திருமஷெட்டிஹள்ளி போலீசார் இணைந்து நீலகிரி தோப்பில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 180 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும். கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement