கல்லுாரி மாணவருக்கு வரவேற்பு

விருத்தாசலம்: குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற கல்லுாரி மாணவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டில்லியில் கடந்த 26ம் தேதி நடந்த குடியரசு தின விழாவில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் தமிழ் துறையில் மூன்றாமாண்டு பயிலும் என்.சி.சி., மாணவர் ஆண்டனி அஸ்வின் ராஜா பங்கேற்றார்.

இதனையொட்டி இம்மாணவருக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில் முதல்வர் சுரேஷ்குமார் தலைமையில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. என்.சி.சி., மாஸ்டர் வள்ளல்பெருமான், தமிழ் துறை தலைவர் கருணாநிதி, பேராசிரியர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement