கல்லுாரி பஸ் மரத்தில் மோதியது மாணவர்கள் உயிர் தப்பினர்

திருவாடானை : டிரைவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால் கட்டு பாட்டை இழந்த தனியார் கல்லுாரி பஸ் மரத்தில் மோதியது. இதில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராமநாதபுரத்தில் தனியார் கல்லுாரிக்கு சொந்தமான பஸ் திருவாடானை சென்று அங்கிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம். நேற்று காலை 11:00 மணிக்கு திருவாடானையில் இரண்டு மாணவர்களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டது.

தேவிபட்டினம் கழனிக்குடியை சேர்ந்த டிரைவர் கருப்பையா 37, ஓட்டினார். கல்லுார் பாரதிநகர் அருகே சென்ற போது டிரைவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோர வேப்ப மரத்தில் மோதியது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பஸ் பின்புறம் அமர்ந்திருந்த மாணவர்கள் காயமின்றி தப்பினர்.

கருப்பையா திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவாடானை எஸ்.ஐ.கோவிந்தன் விசாரித்தார்.

Advertisement