பிள்ளைவயல் காளி கோயிலில் பிப்.10ல் கும்பாபிேஷகம்; நாளை யாகசாலையுடன் துவக்கம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849044.jpg?width=1000&height=625)
சிவகங்கை : சிவகங்கையில் வீற்றிருக்கும் பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் நாளை (பிப்., 8) அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்குகிறது.
ஹிந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள பிரசித்தி பெற்ற சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் உபயதாரர்களால் புனரமைக்கப்பட்டது. இக்கோயில் கும்பாபிேஷகம் பிப்., 10 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை (பிப்., 8) அதிகாலை 5:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷக விழா துவங்குகிறது.
தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். பிப்., 10 அன்று அதிகாலை 5:30 மணிக்கு மங்கள இசை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
யாத்ராதானம், கடம் புறப்பாட்டிற்கு பின் அன்று காலை 9:05 முதல் 10:25 மணிக்குள் சால கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், ராமசுப்பிரமணியராஜா நடத்தி வைக்கின்றனர்.
அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு அபிேஷக ஆராதனைகள் நடைபெறும். அன்று மாலை 5:00 மணிக்கு பிள்ளைவயல் காளியம்மன் திருவீதி உலா வருவார். இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெறும். யாகசாலை பூஜையின் போது திருமுறை பாராயணம் பாடப்படும். ஏற்பாட்டை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.