லாரியை முந்த முயன்றவர் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

யானைகவுனி, கீழ்ப்பாக்கம், அப்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 27. இவர், சி.ஏ., படித்துக் கொண்டே, தந்தை லலித் சுரானாவுடன் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ட்ரல் வழியாக தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் பிரசாந்த் வீடு திரும்பினார்.

வால்டாக்ஸ் ரோடு, அம்மன் கோவில் தெருவில் வந்தபோது, முன்னால் சென்ற சிமென்ட் கலவை லாரியை முந்த முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த முருகன், 49, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement