பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை
நெல்லிக்குப்பம்:பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் காவேரி நகரைச் சேர்ந்தவர் வடிவேலு - ஸ்ரீவித்யா தம்பதியரின் மகள் கோவஸ்ரீ, 16; இவர், கடலுார் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று யூனிபார்ம் இல்லாததால், கோவஸ்ரீ வகுப்பிற்கு செல்லாமல், விடுதியிலேயே இருந்தார். மாலை வகுப்பு முடிந்து சக மாணவிகள் விடுதிக்கு வந்தபோது, குளியலறையில் கோவஸ்ரீ துாக்கில் தொங்குவதை கண்டு திடுக்கி அதிர்ச்சி அடைந்தனர். உடன் விடுதி ஊழியர்கள் கோவஸ்ரீயை மீட்டு, நெல்லிக்குப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில், கோவஸ்ரீயின் தந்தை வடிவேலு இறந்ததும், தாய் ஸ்ரீவித்யா கடந்த 3 மாதங்களாக கோவஸ்ரீயை பார்க்க விடுதிக்கு வரவில்லை. அந்த மனஉளைச்சலில் கோவஸ்ரீ தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தைப்பூசத்துக்கு 24 மணி நேரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்
-
கிராமிய அஞ்சலக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மாநில அமைப்பு செயலர் கோரிக்கை
-
தலைமறைவாக இருந்தவர் கைது
-
கீழக்கரை தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
-
கட்டணமின்றி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை நடவடிக்கை எடுங்க ஆபிசர்
-
மூடுபனியால் மிளகாய் விவசாயம் பாதிப்பு