பாலியல் தொந்தரவு வக்கீல், சிறுமியின் தாய் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வக்கீல், உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, பெருமாள்புரத்தில் வசிக்கும் 38 வயது பெண், கணவரிடமிருந்து விவாகரத்து பெற வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் தன் 15 வயது மகளுடன் வசித்தார். விவாகரத்து வழக்கிற்கு சென்ற போது, வக்கீல் செல்லத்துரை, 54, என்பவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கி பழகினர். பெண் வீட்டிற்கு வந்த போது, செல்லத்துரை சிறுமிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த போது தொந்தரவு கொடுத்ததால் சிறுமி போலீசுக்கு போன் செய்து புகார் அளித்தார்.
மகளிர் போலீசார் செல்லத்துரையை போக்சோ வழக்கில் கைது செய்தனர். உடந்தையாக இருந்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டார். இதனிடையே, வக்கீலுக்கு ஆதரவாக வந்த சிலர், சிறுமியுடன் பழகிய வாலிபர் மீது புகார் அளித்தனர். அந்த வாலிபரும் தற்போது கைது செய்யப்பட்டார்.