பேக்கரிக்கு கமிஷனர் அபராதம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற சக்திவேல் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் இதர இனங்களுக்கு 100 சதவீதம் வசூலிக்க உத்தரவிட்டார்.

திடக்கழிவு மேலாண்மையில் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார். கள ஆய்வின்போது குப்பையை தரம் பிரிக்காமல் வழங்கிய தனியார் பேக்கரிக்கு அபராதம் விதித்தார்.

Advertisement