காங்., ஆர்ப்பாட்டம்

மதுரை: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறி 170 இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியது.இதை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நகர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

அவர் கூறுகையில், ''அமெரிக்காவில் வசித்த இந்தியர்களின் அடிப்படை உரிமைகளை காக்க மத்திய அரசு தவறிவிட்டது. இந்தியர்கள் கைகள் விலங்கிட்டு பல இன்னல்கள் அனுபவித்து ராணுவ விமான கட்டுப்பாட்டுடன் அனுப்பிய அமெரிக்காவிற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளது.

கொலம்பியா நாட்டினர்தங்கள் மக்களுக்காக தனிவிமானம் அனுப்பியதைபோல் செய்திருக்க வேண்டும். மக்களுடன் துணை நிற்க வேண்டியஅரசு அலட்சியமாக இருக்கிறது'' என்றார்.

பொருளாளர் வெங்கட்ராமன், மகிளா காங்., தலைவர் ஷானவாஸ் பேகம், கவுன்சிலர்கள் முருகன், ராஜபிரதாபன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement