சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை: மத்திய அரசின் டி.டி.யு. ஜி.கே.ஒய். திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி பெறும் கிராமப்புற மாணவிகளுக்கு மதுரை பெட்கிராட் நிறுவனம், செல்வி ஹெல்த் கிளினிக், டாக்டர் ஆன் வீல்ஸ் அமைப்புகளின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி, பொதுச்செயலாளர் அங்குசாமி, பொருளாளர் சாராள் ரூபி நுகர்வோர் ஆலோசகர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., பல், மார்பக, கர்ப்பவாய் பரிசோதனை நடத்தப்பட்டது. 200 பெண்கள் பயன்பெற்றனர். டாக்டர்கள் சுவாமிநாதன், ராஜராஜேஸ்வரி, பார்கவி, பல் டாக்டர் தீனதயாளன், நிர்வாக அறங்காவலர் கோமதி ஆகியோர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

Advertisement