பிப்.11,12,16ல் மீண்டும் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவிழ்க்க முடியவில்லை என கிழக்கு தொகுதி, சோழவந்தான் தொகுதி காளைகள் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அதற்கு அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரு தொகுதிக்கு போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி பிப்.,11,12ல் கிழக்கு தொகுதி, 16ல் சோழவந்தான் தொகுதி காளைகளுக்கு போட்டி நடக்கிறது.
இதற்கான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் அய்யாசாமி, பேரூராட்சி தலைவர்கள், தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் பிப்.23ல் ஒரு போட்டி நடத்த வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
-
மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி
-
லேத் பட்டறையில் தீ ரூ.4 லட்சத்துக்கு சேதம்
-
சிறுமி பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை