விவசாய சங்க ஆர்ப்பாட்டம்

மேலுார்: நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு கொடுக்கக்கூடாது என வலியுறுத்தி மேலுாரில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாலுகா செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் அடக்கி வீரணன், தனசேகரன், ராஜாமணி, தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி, நுகர்பொருள் வாணிபக் கழக சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சண்முகம், தாலுகா செயலாளர் மணவாளன், மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement