சின்னேப்பள்ளியில்எருதுவிடும் விழா


சின்னேப்பள்ளியில்எருதுவிடும் விழா


கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் விழாவை தொடர்ந்து கிராமங்களில் எருதுவிடும் விழா நடப்பது வழக்கம். இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னேப்பள்ளி, பில்லகொட்டாய், கத்தாளமேடு, கோட்டக்கொல்லை கிராமங்களின் சார்பில், 5ம் ஆண்டு எருதுவிடும் விழா நடந்தது. சின்னேப்பள்ளியில் நடந்த எருதுவிடும் விழாவில், கிருஷ்ணகிரி, எலத்தகிரி, பர்கூர், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் தர்மபுரி, திருப்பத்துார், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து காலை முதலே காளைகளை வாகனங்கள் அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். நிர்ணயம் செய்யப்பட்ட துாரத்தை குறைந்த வினாடிகளில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்படி முதல் பரிசு, 50,000 ரூபாய், 2வது பரிசு, 40,000 ரூபாய், 3வது பரிசு, 30,000 ரூபாய் என, 50 ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. எருதுவிடும் விழாவை காண, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர்.

Advertisement