வாலிபர் உட்பட இருவர் மாயம்



வாலிபர் உட்பட இருவர் மாயம்

ஓசூர்,:தேன்கனிக்கோட்டை, பிரசாந்த் தெருவை சேர்ந்தவர் சஞ்சப்பா மகள் மஞ்சுஸ்ரீ, 22. கடந்த, 9 இரவு, 9:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகாரில், அதே பகுதியை சேர்ந்த பைரோஸ், 29, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 27. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பென்னங்கூரில் உள்ள ஹாலிடே வேலி ஓட்டலில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம், 12ல், ஓட்டலில் இருந்து வீட்டிற்கு வருவதாக, அவரது தந்தை தர்மன், 52, என்பவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது தந்தை புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement