ரத்த பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852568.jpg?width=1000&height=625)
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், பஜார் சாலையில், தனியார் ரத்த பரிசோதனை நிலையம் செயல்படுகிறது.
நேற்று காலை 7:30 மணியளவில், ரத்த பரிசோதனை நிலையத்தின் உட்புற பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது.
பின்னர் தீயும் பற்றி எரியத் தொடங்கியதால், அப்பகுதியினர் திருக்கழுக்குன்றம் மற்றும் அணுசக்தி துறை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீ பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி, மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.
இதில், ரத்த பரிசோதனை நிலைய சாதனங்கள், 'பிரிஜ், ஏசி' உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகின. சதுரங்கப்பட்டினம் போலீசார், சேத மதிப்பு குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement