நல்லாட்டூர் கோவிலில் முருகன் திருக்கல்யாணம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852574.jpg?width=1000&height=625)
திருத்தணி:திருத்தணி தாலுகா, நல்லாட்டூர் அறம்வளர்த்தநாயகி சமேத நாக நாதேஷ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, தைப்பூசத்தையொட்டி, கோவிலில் உற்சவர் சிவசுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
இதற்காக, கோவில் வளாகத்தில், ஒரு யாக சாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, காலை 11:00 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், உற்சவர் சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.
முன்னதாக, காலையில், மூலவர் நாக நாதேஸ்வரர், முருகன், வள்ளி, தெய்வானை சன்னிதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
இதில், நல்லாட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இரவு உற்சவர் முருகன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.