2 குடிசை வீடுகள் தீயில் கருகின
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852576.jpg?width=1000&height=625)
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வள்ளியம்மபுரம் கிராமத்தில் வசிப்பவர் கோபிநாத் மனைவி லோகநாயகி, 29. குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீ்ட்டு அருகே, சசிகலா, 28, என்பவரும், குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று, தைப்பூசத்தையொட்டி, லோகநாயகி காலையில் வீட்டில் எண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு வேலை சென்றார். காலை 10:00 மணியளவில், வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மேலும் தீ பக்கத்து குடிசை வீட்டிற்கும் பரவியதால் வீட்டிலிருந்த சசிகலா வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார்.
அப்பகுதியினர், திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் இரண்டு குடிசை வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் துணிமணிகள் தீயில் கருகின.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருத்தணி வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் ஆறுதல் கூறி முதற்கட்ட நிவாரண உதவிகள் வழங்கினார்.
தீக்காண காரணம் குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.