எண்கள் சொல்லும் செய்தி

500 கோடி



பங்கு தரகு நிறுவனங்களிடம், முதலீட்டாளர்களால் உரிமை கோரப்படாமல் இருக்கும் சொத்துகளின் மதிப்பு 500 கோடி ரூபாய்க்கும் அதிகம் என செபி மதிப்பிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, 323 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு முதலீடுகளும்; 182 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திர முதலீடுகளும் இவ்வாறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை திரும்பப் பெறுவதற்கு புதிய கட்டமைப்பை செபி முன் மொழிந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க, வரும் மார்ச் 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

10,000 கோடி



அமெரிக்காவைச் சேர்ந்த லாம் ரிசர்ச் நிறுவனம், கர்நாடகா மாநிலத்தில் முதலீடு செய்யவிருக்கும் தொகை இது. செமிகண்டக்டர் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம், கர்நாடகாவில் முதலீடு செய்ய உள்ளது, உலக செமிகண்டக்டர் கட்டமைப்பில் மாநிலத்தை முக்கிய இடத்துக்கு கொண்டு செல்லும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

15,350 கோடி@

@

எப்சிலான் நிறுவனம், மின்சார வாகன பேட்டரி தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி ஆலை அமைக்க, கர்நாடகாவில் முதலீடு செய்ய உள்ள தொகை இது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 'இன்வெஸ்ட் கர்நாடகா' முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தானது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் எப்சிலான், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த முதலீட்டை மேற்கொள்ள இருக்கிறது. இதன் வாயிலாக, பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement