தி.மு.க., மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

சென்னை: கட்சி நிர்வாக வசதிக்காக தி.மு.க.,வில், ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள் மாற்றிஅமைக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


இதன்படி,

ஈரோடு தெற்கு- சு.முத்துச்சாமி-கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி.

ஈரோடுவடக்கு- என். நல்லசிவம்- அந்தியூர்,பவானி சாகர், கோபிசெட்டிப்பாளையம்

ஈரோடு மத்தி- தோப்பு வெங்கடாசலம்- பவானி, பெருந்துறை

திருப்பூர் கிழக்கு- க. செல்வராஜ் எம்.எல்.ஏ.,- பல்லடம், திருப்பூர் மேற்கு

திருப்பூர் மேற்கு- மு.பெ.சாமிநாதன்- காங்கேயம், தாராபுரம்

திருப்பூர் வடக்கு- என். தினேஷ்குமார்- அவிநாசி, திருப்பூர் வடக்கு

திருப்பூர் தெற்கு- இல.பத்மநாபன்- உடுமலை,மடத்துக்குளம்

விழுப்புரம் வடக்கு- செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ., -செஞ்சி,மயிலம், திண்டிவனம்

விழுப்புரம் தெற்கு- கவுதம சிகாமணி- திருக்கோவிலுார், விக்கிரவாண்டி

விழுப்புரம் மத்தி- ஆர். லட்சுமணன் எம்.எல்.ஏ., -விழுப்புரம்,வானுார்

மதுரை வடக்கு-பி.மூர்த்தி- மேலுார், சோழவந்தான், மதுரை கிழக்கு, மேற்கு

மதுரை மாநகர்- கோ.தளபதி எம்.எல்.ஏ., - மதுரை வடக்கு, மத்தி, தெற்கு

தவிர தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலராக அண்ணாதுறை எம்.எல்.ஏ., பொறுப்பிலிருந்துவிடுவித்து, பழனிவேல் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகப்பொறுப்பாளராக நியமனம்.

நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து முபாரக் விடுவிக்கப்பட்டு, கே.எம்.ராஜூ மாவட்ட பொறுப்பாளராக நியமனம்.

நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளரான மைதீன்கான் பொறுப்பிலிருந்து விடுவித்து, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமனம்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., பொறுப்பிலிருந்து விடுவித்து எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம்.

ஆகியோரை தி.மு.க., தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நியமித்துள்ளார்.

Advertisement