பரஸ்பர வரி: டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853845.jpg?width=1000&height=625)
வாஷிங்டன்: '' அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு, பதிலுக்கு வரி விதிக்கப் போகிறேன்,'' என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின் போது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி வந்தார். குறிப்பாக இந்தியா, சீனா உள்ளி்ட நாடுகள் மீது புகார் கூறினார்.
தொடர்ந்து அதிபரான பிறகு, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டு உள்ளார். இதற்கு அந்நாடுகள் பதிலடி கொடுத்து உள்ளன.
இந்நிலையில், டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மூன்று சிறந்த வாரங்கள். ஆனால், இதுவரை இல்லாத சிறந்ததாக இருக்கலாம். ஆனால், இன்று தான் பெரியது. பரஸ்பர வரி. அமெரிக்காவை சிறந்தது ஆக்குவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
![கிஜன் கிஜன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![ஆரூர் ரங் ஆரூர் ரங்](https://img.dinamalar.com/data/uphoto/271873_205342590.jpg)