தடுப்பு வலையின்றி செல்லும் குப்பை வாகனத்தால் சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை டிராக்டர், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சேகரித்து, கிடங்கிற்கு எடுத்து சென்று தரம் பிரிக்கப்படுகிறது.

குப்பை எடுத்து செல்லும் போது, குப்பை காற்றில் பறக்காமல் இருக்க டிராக்டர் மற்றும் லாரிகளில் தடுப்பு வலை போட்டு எடுத்து செல்வதில்லை. குப்பை வாகனங்களின் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது, குப்பை கழிவு விழுகிறது.

இதனால், அலுவலகம் மற்றும் பல்வேறு வேலையாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, குப்பை ஏற்றி செல்லும் வாகனங்களின் மீது, கட்டமாயமாக தடுப்பு வலை போட்டு எடுத்து செல்ல வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement