நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா: ஏற்க முடியாது என்கிறார் உக்ரைன் அதிபர்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853880.jpg?width=1000&height=625)
முனிச்: '' எங்களின் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்கா - ரஷ்யா ஏற்படுத்தும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம்,'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது முதல் ரஷ்யா - இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். ஜோ பைடனுக்கு பதில் நான் அதிபராக இருந்து இருந்தால், இந்த போரே துவங்கியிருக்காது எனவும் தெரிவித்து இருந்தார்.
அதிபரான பிறகு, போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்கவும், நாங்கள் ஒப்புக் கொண்டு உள்ளோம். எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடக்கும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
உக்ரைன் சுதந்திரமான நாடு. நாங்கள் இல்லாமல் எடுக்கப்படும் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.
தான் விரும்பியபடி எதுவும் நடக்காத காரணத்தினால், அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் நடத்துவதற்கு புடின் விரும்புகிறார். இதனால், இன்று இரு தலைவர்களின் உரையாடல் மிகவும் முக்கியமானது.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர், அமெரிக்கா உக்ரைன் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். புடினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
![R Dhasarathan R Dhasarathan](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)