மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கிச்சூடு: சக வீரர்கள் 2 பேர் பலி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853890.jpg?width=1000&height=625)
இம்பால்: மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இச்சம்பவத்தில் சக வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
மணிப்பூரில் கூகி மற்றும் மெய்தி சமூகத்தினர் இடையே நடக்கும் மோதல் காரணமாக, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பைரோன் சிங் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால், பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மணிப்பூரின் லாம்சாங் மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎப் முகாமில், 120 பட்டாலியனைச் சேர்ந்த வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தனார். இச்சம்பவத்தில் சக வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிஆர்பிஎப் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.