ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி

பிட்ஸ்பர்க்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் வேலவன் செந்தில்குமார்.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் ஆண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அமெரிக்காவின் ஷாஜகான் கானை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை 11-7, 11-4 என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 9-11 என நழுவவிட்டார்.
நான்காவது செட்டில் சிறப்பாக செயல்பட்ட இவர், 11-7 என வசப்படுத்தினார். முடிவில் வேலவன் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற ஸ்காட்லாந்தின் கிரெக் லாபெனை எதிர் கொள்கிறார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ரமித் டான்டன், மெக்சிகோவின் சீசர் சாலஜருடன் மோதினார். இதில் ரமித் டான்டன் 3-0 என்ற (14-12, 11-4, 11-8) நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
இரண்டாவது சுற்றில் 'நம்பர்-1' வீரர் பெர்முடாவின் டீகோ எலியாசை சந்திக்க உள்ளார்.

Advertisement