உணவுப்பதார்த்தம் சமைத்து அசத்திய பள்ளி மாணவியர்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இப்பாடப்பிரிவுக்கான செய்முறைத்தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இரு பிரிவுகளாக, 92 மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாணவியரும் தங்களுக்கு கேட்கப்பட்ட வினா அடிப்படையில்,' புரூட்சாலெட்', 'பிரைடு ரைஸ்', 'எக் அண்ட் பிரட் ஆம்லேட்', 'வெஜ் பிரியாணி', 'வெஜிடபிள் புலாவ்' உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை தயாரித்தனர். பள்ளி ஆய்வகம் கேஸ் ஸ்டவ், வடசட்டி, பாத்திரம், சகிதமாக, உணவு பொருட்கள் வாசனையுடன் சமையலறையாக மாறி போனது. முன்னதாக, உணவு பொருட்கள் தயார் செய்வது எப்படி, வழிமுறை என்ன என்பது குறித்து கேள்வி, பதிலுக்கு மாணவியர் விடையெழுதினர்.
கோவை பி.எஸ்.ஜி.ஜி., கன்னியா குருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மனோன்மணி, கோவை, ராஜாவீதி, சி.சி.எம்.ஏ., மாணவியர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வின்சி இருவரும் பங்கேற்று, சத்துணவியல் மற்றும் மனையியல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை கண்காணித்தனர்.