சிட்டி கிரைம்
போலீசுடன் வாக்குவாதம்
பீளமேடு போக்குவரத்து போலீஸ் சென்றாயன், நேற்று முன்தினம் சிட்ரா பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் பஸ் டிரைவர் செல்போனில் பேசிய படியே பஸ்சை ஓட்டி வந்தார். இதைப்பார்த்த சென்றாயன் பஸ் டிரைவரிடம் கேட்டார். அதற்கு டிரைவர் சென்றாயனை தகாத வார்த்தைகளால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உளியால் குத்தியவர் கைது
கோவை, கண்ணப்பநகரை சேர்ந்தவர் முத்து கருப்பையா, 40. இவருக்கு பள்ளி படிக்கும் மகள் உள்ளார். ரத்தினபுரி பாலுசாமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 29.
மணிகண்டன், முத்து கருப்பையாவின் மகளிடம் பழகி வந்துள்ளார். இது குறித்து அறிந்த முத்து கருப்பையா மணிகண்டனை கண்டித்துள்ளார். எனினும் இருவரும் பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி, மணிகண்டன், ரத்தினபுரியில் உள்ள அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முத்து கருப்பையா தான் கொண்டு வந்த உளியால் மணிகண்டனின் வயிற்றுப் பகுதியில் குத்தினார். இதில் காயமடைந்த மணிகண்டன் சிகிச்சை பெறுகிறார். ரத்தினபுரி போலீசார் முத்து கருப்பையாவை கைது செய்தனர்.
வாகனங்களை சேதப்படுத்தியவர் கைது
கோவை, வெள்ளலூரிலுள்ள முல்லை நகரை சேர்ந்தவர் சந்திரகலா, 48. இரு நாட்களுக்கு முன் நள்ளிரவு இவரது வீட்டின் முன் போதையில் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார். சந்திரகலா கதவை திறந்தபோது அவரை மிரட்டிய அந்நபர், வீட்டின் முன்பிருந்த மின் விளக்கு, கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தார். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மது பாட்டில்களை எறிந்து சேதப்படுத்தி சென்றார். போத்தனூர் போலீசார் விசாரித்து அதே பகுதியை சேர்ந்த சுதர்சன், 34 என்பவரை கைது செய்தனர்.
பூட்டை உடைத்து நகை திருட்டு
தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன், 65. இவர் கடந்த 11ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு பழநி கோவிலுக்கு சென்றார். முருகன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 2 சவரன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
3வயது குழந்தை மீது மோதிய பைக்
ரத்தினபுரி, முருகன் நகரை சேர்ந்தவர் குமார், 29; மனைவி பவித்ரா, 24. இவர்களுக்கு லிஸ்வித், 3 என்ற ஒரு குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம், லிஸ்வித் வீட்டு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது, அவ்வழியாக பைக்கில் வந்த சத்ய நாராயணன், 19 வேகமாக வந்து கட்டுப்பாடு இன்றி குழந்தையின் மீது மோதினார். இதில் குழந்தையின் தலை, கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும்
-
சில வரி செய்திகள்...
-
மாணவரின் திறனை மேம்படுத்துவதே மணி பப்ளிக் அகாடமியின் நோக்கம்
-
மாசடைந்து வரும் குட்டை; வீணாகும் மக்கள் வரிப்பணம்
-
ஆடுகளை வேட்டையாடிய நாய்கள்; சாலை மறியல் செய்து விவசாயிகள் ஆவேசம்
-
உணவுப்பதார்த்தம் சமைத்து அசத்திய பள்ளி மாணவியர்
-
சத்தி - ஈரோடு - கோபி ரயில் வழித்தடம்; ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., முறையீடு