அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணவாளநகர்:வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் உள்ள மங்கள ஈஸ்வரர் கோவிலில் கடந்த 10ல் கும்பாபிேஷகம் நடந்தது. சிவபாலகர் குழு சார்பாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

இதையடுத்து அனுமதியின்றி பேனர் வைத்ததாக ராஜேஷ் மற்றும் சிவபாலகர் குழுவினர் மீது மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement