சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் கைது

சென்னை:வெளிநாடுகளில் இருந்து, 'மசூர் பருப்பு' எனக்கூறி, சட்ட விரோதமாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இரு தினங்களுக்கு முன், சுங்கத்துறை துணை அதிகாரி, இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் சில அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வந்தது. நேற்று சென்னை துறைமுக சுங்கத்துறை ஏற்றுமதி பிரிவை சேர்ந்த, கூடுதல் கமிஷனர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

அவரை, சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்; 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement