நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்கலம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.

கொள்முதல் நிலைய அலுவலர் பாண்டியன் வரவேற்றார். தி.மு.க., மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், துணைச் செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், தேவராஜ், சுரேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement