அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆலோசனை

திருப்பூர்; திருப்பூர், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
கொங்கு மண்டலத்தில் உள்ள முதன்மையான சக்தி பீடம் மற்றும் பழமையான அங்காளம்மன் கோவில் இதுவே ஆகும். இக்கோவில் திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பல சமூக மக்களின் குல தெய்வமாக உள்ளது.
மேலும், தங்கக் கோபுரம் அமைக்கப்படுவதும் தனிச்சிறப்பு. இதனை சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் சார்பாக அதன் சேர்மன் ராதாகிருஷ்ணன் உபயமாக வழங்கியுள்ளார்.
தற்போது கும்பாபிேஷக விழா குறித்து ஆலோசனைக் கூட்டம், திருப்பணி குழுத் தலைவர் சின்னு கவுண்டர் தலைமையில் நடந்தது. இதில், கோவில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் மாலதி, செயல் அலுவலர் அன்புச்செல்வி, அறங்காவலர்கள் மற்றும் திருப்பணி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும், ஜூன் 6ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கமிட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும்
-
உடல் உறுப்பு தானம் கவுரவிப்பு திட்டத்துக்கு பாராட்டு
-
ஐகோர்ட் உத்தரவு மீறல்: 'ஆபீஸ் ஒர்க்' செய்யும் கைதிகள்
-
திருப்பதி சுவாமி தரிசனம்: முன்பதிவு தேதி அறிவிப்பு
-
தொடர்கிறது 'இன்ப்ளுயன்ஸா' தொற்று: குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியம்
-
இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பம்; 3 டிகிரி அதிகரிக்கும்
-
கால்நடை தடுப்பூசி முகாம் நாளை முதல் துவக்கம்