முதியவர் தற்கொலை போலீசார் விசாரணை

புதுச்சேரி: முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுசாரம், சுந்தரமூர்த்தி நகர், கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 61; எலக்ட்ரீசியன். குடிப்பழக்கம் காரணமாக, மனநலம் பாதிக்கப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக, அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் கூறி, மிரட்டி வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் மாடியில், புடடையால் துாக்கு போட்டுக்கொண்டார். தகவல் அறிந்த லாஸ்பேட்டை போலீசார் விரைந்து வந்து, மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், கிருஷ்ணன் வழியிலேயே இறந்தார்.

புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement