13 உதவி சப் -இன்ஸ்பெக்டர்கள் திடீர் பணியிட மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 13 உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி, ஆயுதப்படையில் பணியாற்றிய வெங்கடகிருஷ்ணன் சி.சி.ஆருக்கும், திருக்கனுாரில் பணியாற்றிய சீனிவாசன் மங்கலத்திற்கும், காரைக்கால் ஆயுதப்படையில் பணியாற்றிய முருகேசன் காரைக்கால் சி.சி.ஆருக்கும், காரைக்கால் கடலோர காவல்படையில் பணியாற்றிய கலியமூர்த்தி கரையாம்புத்துாருக்கும், காரைக்கால் கடலோர காவல் படையில் பணியாற்றிய பக்கிரிசாமி திருநள்ளாருக்கும், ஆயுதப்படையில் பணியாற்றிய ரவிச்சந்திரன் டி.ஆர்.பட்டினம் போக்குவரத்திற்கும், திருநள்ளாரில் பணியாற்றிய சிவராமகிருஷ்ணன் அரியாங்குப்பத்திற்கும், புதுச்சேரி ஸ்டோரில் பணியாற்றிய சங்கரன் ஆயுதப்படைக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய அருள், உருளையன் பேட்டைக்கும், திருநள்ளாரில் பணியாற்றிய லெனின் ராஜீ மாகேவிற்கும், காரைக்கால் டவுனில் பணியாற்றிய வேல்முருகன் மாகி பண்டக்கலுக்கும், லாஸ்பேட்டையில் பணியாற்றிய செஞ்சிவேல் சோலை நகருக்கும், சிறப்பு புலனாய்வில் பணியாற்றிய முத்துகுமரன் கரிக்கலாம்பாக்கத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் வெளியிட்டுள்ளனர்.

Advertisement