குடும்பத்தினர் பிரிந்ததால் தொழிலாளி தற்கொலை 

புதுச்சேரி: புதுச்சேரி, வைத்திக்குப்பம் வன்னியர் வீதியை சேர்ந்தவர் குமரேசன், 43; ஆசாரி. இவரது, குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் 2 மகள்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அவரை விட்டு பிரிந்து சென்றனர்.

இதனால், தனிமையில் வசித்து வந்த குமரேசன், மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால், மனமுடைந்து நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது தந்தை நடராஜன் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement