ரூ.429 கோடி கடன் வழங்க கூட்டுறவுத்துறை இலக்கு
தேனி : மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் இந்த ஆண்டின் இலக்கை அடைய இரு மாதத்தில் ரூ.429 கோடி கடன் வழங்கும் பணியை கூட்டுறவுத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் 80, நகரகூட்டுறவு வங்கிகள் 2, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் 2, வேளாண் விளைபொருள் கூட்டுறவு கடன் சங்கங்கள் 2, பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கூட்டுறவு சங்கம் 15, மதுரை மத்திய கூட்டுறவு கடன் சங்க கிளைகள் 11 என மொத்தம் 116 கடன் சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதில் நகைக்கடன், வீட்டு கடன், சிறுகுறு நிறுவனங்களுக்கான கடன், தாட்கோ, வேளாண் கடன்கள் என 22 வகை கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டிற்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1510 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஜன.,31 வரை ஒருலட்சத்து 20ஆயிரத்து 518 பேருக்கு ரூ. 1081கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் இரண்டு மாதங்களில் ரூ.429 கோடி கடன் வழங்கி இலக்கை அடைவதற்காக கூட்டுறவுத்துறையினர் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மேலும்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு